News December 28, 2025

தஞ்சை: பாலியல் குற்றவாளி அதிரடி கைது

image

கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தஞ்சையை சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), 2 மாத தேடலுக்குப் பிறகு தஞ்சையில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது சிறுமியுடன் பழக்கமேற்பட்டு, அவரை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாலாஜி மீது கொலை முயற்சி, திருட்டு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 28, 2026

தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

தஞ்சை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.<<>>gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.’

News January 28, 2026

தஞ்சை: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

image

வாரத்தில் 5 நாட்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் முன்பு மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து, கோரிக்கை முழக்கமிட்டனர்.

News January 28, 2026

தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிரமப்பட்டினம் துணை மின் நிலையத்தில், இன்று (ஜன.28) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அதிரமப்பட்டினம், ராஜாமடம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!