News December 28, 2025
தனியா? அணியா? விஜய் சூசகம்

தேர்தல் கூட்டணி குறித்து ‘ஜனநாயகன்’ விழாவில் தனது நிலைப்பாட்டை விஜய் சூசகமாக கூறியுள்ளார். எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்றும், 33 ஆண்டுகளாக மக்களுடன் இருப்பதால் அதுவும் ஒரு மிகப்பெரிய அணிதானே எனவும் பேசினார். இதில் சஸ்பென்ஸ் வைத்தால் தான் கிக் இருக்கும் எனக் கூறிய விஜய், இதை கைதட்டலுக்காக பேசவில்லை மனதில் இருந்து மக்களுக்காக பேசுகிறேன் என தெரிவித்தார். கூட்டணியை தான் அணி என்று கூறுகிறாரோ?
Similar News
News January 12, 2026
தூத்துக்குடி: பிளேடால் கழுத்தை அறுத்த கைதி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நகை அடகுக்கடை வாசலில் வைத்து 2023-இல் வக்கீல் முத்துக்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ஆறுமுகநேரியை சேர்ந்த இலங்கேஸ்வரன்(29), அம்பையை சேர்ந்த ராஜரத்தினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் பாளை சிறையில் உள்ள ராஜரத்தினம் பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 12, 2026
ராஜ்யசபா + 30 தொகுதிகள்.. பிரேமலதா கறார்!

தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜ்யசபா சீட்டுடன் 30 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என EPS-யிடம் பிரேமலதா கறாராக கூறிவிட்டாராம். தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா MP-க்களை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், தேமுதிகவின் கோரிக்கை குறித்து அதிமுக தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.
News January 12, 2026
உலகின் மிகப்பெரிய கோயில்கள்

கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்து வரலாற்றையும் கட்டடக்கலையையும் பறைசாற்றுகின்றன. பெரும்பாலான கோயில்கள் மிகப்பெரிய பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய கோயில்கள் என்னென்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?


