News December 28, 2025
காந்தியை அவமதிக்கும் பாஜக: காங்கிரஸ்

MGNREGA திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள VB G-RAM G திட்டத்திற்கு எதிராக ஜன.5-ல் நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. MNREGA என்பது வெறும் திட்டமல்ல, அது இந்திய அரசியலமைப்பு வழங்கிய வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்தார். திட்டத்தின் பெயரை மாற்றியது காந்தியை அவமதிக்கும் செயல் என்றும், இதனால் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 17, 2026
சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆகணும்: TTV

ஜன நாயகன் படத்தை நீதிபதிகள் தடை செய்துள்ளபோது அரசு மீது எப்படி குற்றம் சுமத்த முடியும் என TTV தினகரன் கேட்டுள்ளார். மேலும், தனக்கு பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை என்றவர், கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என்று தவெக தான் கேட்டது. அதன்படி தற்போது நடக்கும் சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆக வேண்டும். அது எப்படி பாஜகவின் அழுத்தமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 17, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. HAPPY NEWS

மகளிருக்கு பொங்கலுக்குள் மகிழ்ச்சியான செய்தி என அமைச்சர் கூறியதிலிருந்தே, எப்போது உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இதுவரை அரசு அறிவிப்பை வெளியிடவில்லை. இதனிடையே, மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டது. இதனால் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட திமுக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை எங்கே? பாஜக

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என CM ஸ்டாலின் அறிவித்த நிலையில், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வழக்கம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். 5 ஆண்டுகளில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ₹60,000 எப்போது வருமென தெரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.


