News December 28, 2025

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, வரும் 29 ஆம் தேதி அன்று ட்ரோன்கள், மைக்ரோலைட் விமானங்கள், பாராகிளைடர்கள், பலூன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

Similar News

News December 30, 2025

புதுவை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

புதுவை: துணை ஜனாதிபதி மாணவர்களுக்கு வேண்டுகோள்

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் & பதக்கங்களை வழங்கிய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியபோது, “புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது A+ தகுதி பெற்றுள்ளது. இளைய தலைமுறையினரிடம் போதை பழக்கம் சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகாதீர்கள். உங்களது நண்பர்களையும் போதை பக்கத்திற்கு செல்ல விடாதீர்கள்.” என்றார்.

News December 30, 2025

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரியில் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நாளை (டிச.31) இரவு கடற்கரை சாலை மற்றும் நகரின் மையப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுவர். அதனால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை (டிச.31) மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று சீனியர் எஸ்.பி நித்யா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!