News December 28, 2025
கடலூர்: ரோந்து அதிகாரிகள் எண் அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27.12.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் மற்றும் இடைக்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு சிவனை ஒரு முறை வழிபடுவது காசியில் 16 முறையும், தி.மலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும் வழிபடுவதற்கு சமம் என அப்பகுதி மக்களின் நம்பிக்கை. மேலும் புலியூர் என்ற புலிக்கால் துறவி இப்பகுதியில் பாவமன்னிப்பு பெற்றதால் பாடலீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News January 12, 2026
கடலூர் மாவட்டம் முழுவதும் 17.5 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.12) காலை 8.30 மணி நிலவரப்படி பரங்கிப்பேட்டை 3.2 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 3 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 2.7 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் பண்ருட்டி தலா 1.3 மில்லி என மாவட்டம் முழுவதும் 17.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News January 12, 2026
கடலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <


