News May 1, 2024
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நெல்சன்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன். விஜய்யை வைத்து பீஸ்ட், ரஜினியை வைத்து ஜெயிலர் படங்களை இயக்கிய இவர், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். ‘ஃபிளமண்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதை அறிவித்துள்ள அவர், மே 3 ஆம் தேதி தான் தயாரிக்கும் முதல் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
CM ஸ்டாலினை சந்தித்த முக்கிய தலைவர்

உரிய மதிப்பளிக்காததால் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், CM ஸ்டாலினை சந்தித்த அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதியளித்திருக்கிறார். மேலும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ என அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
News January 28, 2026
Google Maps-ல் இருக்கும் கலர்கள் எதை குறிக்கிறது?

கிரீன்: டிராபிக் இருக்காது ★ஆரஞ்ச்: மிதமான டிராபிக் இருக்கும் ★ரெட்: அதிக டிராபிக் இருக்கும். அவசரமாக செல்ல, வேறு பாதையை தேர்ந்தெடுக்கலாம் ★நீலம்: மேப்பில் பயணத்தை தொடங்கும்போது, அது பரிந்துரைக்கும் ரூட்டை இது குறிக்கிறது ★ஊதா: மெயின் ரோட்டை தவிர்த்து சந்து சந்தாக செல்லும், ரூட்டை இது குறிக்கும் ★பிரவுன்: போகும் வழி, மலை அல்லது உயர்ந்த நிலப்பரப்பின் வழியாக செல்வதை குறிக்கிறது. SHARE IT.
News January 28, 2026
BREAKING: ₹5,000-ஆக உயர்வு.. ஸ்டாலின் அறிவித்தார்

IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். *வஃபு வாரியத்தில் பதிவு செய்த உலமாக்களுக்கான பென்ஷன் ₹3000-ல் இருந்து ₹5,000 ஆக உயர்வு. *கல்லறைத் தோட்டம் இல்லாத பகுதிகளில் அரசு நிலம் வழங்க ஏற்பாடு. *சென்னை, மதுரையை போல் கோவையிலும் வஃபு தீர்ப்பாயம். *உருதுமொழி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை. *உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க ₹50,000 மானியம்.


