News December 28, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.27) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 10, 2026

அரியலூர்: சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!

image

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜன் (70). இவர் மேலத்தெரு அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை சுந்தர்ராஜன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் ராஜதுரை, விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 10, 2026

அரியலூர் மாவட்டத்தில் 3 பேர் கைது!

image

உடையார்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா (29), பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (54) மற்றும் இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (26) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

News January 10, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் உயர் கல்வி உதவித்தொகை பெறும் 10,000 குழந்தைகளுக்கு, 40 பிரிவில் இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04329 220087 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!