News December 28, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று டிச.27 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 15, 2026

நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 15, 2026

நாமக்கல்: ஜல்லிக்கட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள்<> namakkal.nic.in <<>>என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

நாமக்கல்லில் தகாத உறவால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

image

நாமக்கல் அருகே பேளுக்குறிச்சியில், சங்கீதா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்த ஆட்டோ டிரைவர் கதிரவனை, அப்பெண்ணின் 17 வயது மகன் கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கதிரவனின் தாய் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!