News December 28, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (டிச.27) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!
Similar News
News January 11, 2026
BIG NEWS: ராணிப்பேட்டைக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் பகுதியில் தற்போது மழை பெய்கிறதா என கமெண்டில் சொல்லுங்க.
News January 11, 2026
ராணிப்பேட்டை: தறிகெட்டு ஓடிய கார் – அலறிய மூதாட்டி!

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று (ஜன.10) பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கார் ஓட்ட பழகிய பெண் ஒருவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவரின் கால் மீது கார் மோதியது. இதில், மூதாட்டி காலில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 11, 2026
அரக்கோணம்: குளிக்கும் போது மூச்சுத் திணறி பலி!

கணபதிபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (45) நேற்று (ஜன.10) தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் குளித்துள்ளார். அப்போது திடீரென மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தக்கோலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


