News December 28, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 29, 2025
விழுப்புரம்:வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

வந்தவாசி வட்டம், வெண்மந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ரா.மணிகண்டன் (22). இவர், சனிக்கிழமை இரவு திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியார்பாளையம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
News December 28, 2025
விழுப்புரம்: ஹோட்டலில் தரமற்ற உணவா?

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
விழுப்புரம்:ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்<


