News December 28, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 13, 2026
விழுப்புரம்: சாலை விபத்தில் முதியவர் பலி!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து திருவக்கரைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 13, 2026
விழுப்புரத்தில் இளம்பெண் தற்கொலை!

திண்டிவனம் தீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் புனிதா. இவருக்கும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதி சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை செய்கின்றனர்.
News January 13, 2026
விழுப்புரம்: பள்ளத்தில் கவிழ்ந்த லாரி!

திண்டிவனம், பாதிரியில் NH சார்பில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆஷித் (18), ராஜேஷ் ஷியாம் (30), கணேஷ்குமார் (60), மனோஜ் பேட்டா (36), போலன் முக்கியா (31) ஆகியோர் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த லாரி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இது குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


