News May 1, 2024

முத்தாலங்குறிச்சி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

image

தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள பழமையான கோவிலான வீரபாண்டீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் கோயிலை இந்து அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை இன்று ஆய்வு செய்தனர். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News November 22, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு போட்டிகள் அறிவிப்பு

image

திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை போட்டுவிட்டும் வகையில் அரசு ஆண்டுதோறும் மாநில அளவில் விவசாயிகளுக்கு போட்டிகள் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விவசாயிகள் போட்டியில் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடியில் மாவட்ட வேளாண்மை துறை அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

தூத்துக்குடி: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

image

தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526 / 0461-2334282 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க

News November 22, 2025

தூத்துக்குடி: சிறுவன் பாலியல் வழக்கு.. சாகும் வரை ஆயுள்!

image

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை கடந்த 2024-ம் ஆண்டு வேம்பாரை சேர்ந்த தாமஸ் அற்புத ரகசியம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தாமஸ் அற்புத ரகசியத்திற்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!