News May 1, 2024
10 லட்சம் பேரில் 7 பேருக்கு மட்டுமே பாதிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சம் பேரில் 7 பேர் மட்டுமே பாதிப்பை சந்தித்ததாக ICMR முன்னாள் விஞ்ஞானி ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார். கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் கூறியது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த ராமன், தடுப்பூசி செலுத்திய 2-3 மாதங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 14, 2026
விமான நிலையத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய்

கூர்மையான பொருளை வைத்திருந்ததால் தனி விமானத்தில் ஏற விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படையினர் விஜய்யின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கத்திரிக்கோல் இருந்ததாக கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட பொருள் என கூறி அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். இதன்பின், 20 நிமிடங்கள் தாமதமாக விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். எதற்காக கத்தரிக்கோல் வைத்திருந்திருப்பார்?
News March 14, 2026
அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா?

பித்தப்பையில் கல் இருந்தால், இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும். இதனால், அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பித்தப்பையில் இருந்து செல்லும் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் பித்தம் படியும். இதன் விளைவாக, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் காமாலைக்கும் வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே டாக்டரை அணுகுங்கள் மக்களே!
News March 14, 2026
டிக்கெட் விலையை உயர்த்திய விமான நிறுவனங்கள்

விமான எரிபொருள் விலை உயர்வு எதிரொலியால் Air India-வைத் தொடர்ந்து, Indigo & Akasa Air நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதனால் உள்நாட்டு டிக்கெட்களுக்கு ₹199 – ₹425 வரையும், வெளிநாட்டு பயணங்களுக்கு ₹1,300 – ₹18,000 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


