News December 27, 2025
விருதுநகர் : இனி WhatsApp மூலம் புக் பண்ணுங்க..!

விருதுநகர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
Similar News
News January 3, 2026
விருதுநகர்: கட்டட வேலை பார்த்தவர் பரிதாப பலி

விருதுநகர் அடுத்த சூலக்கரைமேடைச் சேர்ந்தவர் முருகன் 31. இவர் கட்டடங்களுக்கு சென்ட்ரிங் பலகை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று சூலக்கரையில் காலை 11:30 மணிக்கு ஒரு வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் போது இணைப்பு மின் ஒயரில் சுத்தியல் பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
விருதுநகர்: 4 அணைகளில் மீன் பாசி குத்தகை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவிலாறு, குன்னூர் சந்தை இருக்கன்குடி ஆகிய நான்கு அணைகளில் மீன் பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இவை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.