News December 27, 2025
புதுச்சேரி: முதல்வரிடம் ஆசி பெற்ற மத்திய அமைச்சர்

இன்று புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார். அவருக்கு முதல்வர் மலரும் எலுமிச்சம்பழமும் கொடுத்து ஆசீர்வதித்தார். மேலும் மத்திய அமைச்சர் புதுச்சேரி காவல்துறையை, நவீனமயமாக்க தேவையான நிதியை ஒதுக்குவதாகவும் உறுதியளித்தார்.
Similar News
News January 3, 2026
புதுவை: போலீஸ் உடல் தகுதி தேர்வு-66 பேர் தேர்வு!

புதுச்சேரியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று 500 பேர் அழைக்கப்பட்டதில், 279 பேர் மட்டுமே பங்கேற்றனர். 221 பேர் ஆப்சென்ட் ஆகினர். மேலும் நேற்று நடந்த உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகளில் 279 பேரில், 66 பேர் மட்டுமே அடுத்த மாதம் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
News January 3, 2026
புதுச்சேரியில் வாகன பேன்சி எண்கள் ஏலம்

புதுவை போக்குவரத்துத் துறை ஆணையரின் செய்திக் குறிப்பில், “புதுவை போக்குவரத்துத் துறையின் PY 02 Z (காரைக்கால்) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5-ம் தேதி காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 4:30 வரை ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!


