News December 27, 2025
மிக குறைந்த பந்துகளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்

மெல்போர்னில் நடந்த 4-வது ஆஷஸ் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இந்த போட்டி மிகவும் குறைந்த பந்துகளில்(852) முடிந்த ஆஷஸ் டெஸ்டின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன் ஓல்டு டிரப்ஃபோர்டில் (1888) 788 பந்துகளில், லார்ட்ஸில்(1888) 792 பந்துகளிலும், பெர்த்தில்(2025) 847 பந்துகளில் போட்டிகள் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 31, 2026
13 பேரை சுடும்போது EPS நேரில் சென்றாரா? KAS

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தை சந்திக்க விஜய் நேரில் செல்லவில்லை என EPS வைத்த விமர்சனத்துக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், 13 பேரை குருவியை சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது, அப்போதைய CM EPS நேரில் சென்றாரா என KAS கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஒரு அதிமுக அமைச்சர்கூட நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் சாடியுள்ளார்.
News January 31, 2026
பெரும் கஷ்டத்தை போக்கும் அற்புத மூலிகை

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤பெருங்காயப் பொடியை வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையும் ➤பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்னை தீரும் ➤தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News January 31, 2026
குப்பை வண்டியில் உணவா..: அண்ணாமலை

தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது அதை வழங்காமல், உணவு வழங்குவதாக கூறி CM ஸ்டாலின் விளம்பர நாடகம் நடத்தினார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர்களை அவமானப்படுத்தும் விதமாக குப்பை வண்டியில் உணவு கொடுக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த தரமற்ற உணவைக் கூட வெகுநேரம் காக்க வைத்தே திமுக அரசு வழங்குகிறது என்றார். மேலும், தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை CM காயப்படுத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.


