News December 27, 2025
சாறுமுன்: உதகை – குன்னூர் சாலையில் விபத்து

உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காணிக்கராஜ் நகர் அருகே சற்றுமுன் (இன்று) இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அருவங்காடு காவல்துறையினர், விபத்து நிகழ்ந்தது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
நீலகிரி மாவட்ட காவல்துறை பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
News January 15, 2026
நீலகிரியில் குடும்பத்துடன் சென்ற வாகனம் விபத்து!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை குறும்படி அருகே பொலிரோ வேன் விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, தாய் மற்றும் 2 குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த குன்னூர் போலீசார் மற்றும் ஹைவே ரோந்து படையினர் விரைந்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 15, 2026
நீலகிரி மக்களே உடனே SAVE பண்ணுங்க!

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!


