News May 1, 2024
IPL: சென்னை அணி பேட்டிங்

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் CSK பேட்டிங் செய்ய உள்ளது. CSK அணியில் சிறு மாற்றமாக பதீரனா, தேஷ்பாண்டேவிற்குப் பதிலாக ரிச்சர்ட் க்ளாசென், ஷர்துள் விளையாடுகின்றனர். புள்ளிப் பட்டியலில் CSK நான்காவது இடத்திலும், PBKS 8ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News April 5, 2026
நயினாரால் அண்ணாமலைக்கு சீட் தரவில்லை: KAS

நயினார் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதால்தான் அண்ணாமலைக்கு சீட் தரவில்லை என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு 11% ஆக இருந்த வாங்கு வங்கி தற்போது 5% ஆக குறைந்துவிட்டதாகவும், கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசி வரும் எடப்பாடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். அண்ணாமலை விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், செங்கோட்டையன் நயினாரை காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
News April 5, 2026
OLA EV ஸ்கூட்டர் விலை குறைகிறது!

OLA நிறுவனம் தனது ரோட்ஸ்டர் எக்ஸ்(4.5 kWh) என்ற புதிய EV ஸ்கூட்டருக்கு மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்திற்கான சான்றிதழை பெற்றுள்ளது. இந்தச் சான்றிதழ் மூலம் ஒவ்வொரு வண்டியின் விற்பனை மதிப்பிலும் 18% வரை மானியமாக ஓலா நிறுவனம் பெற முடியும். இதன் மூலம் நிறுவனத்திற்கான உற்பத்திச் செலவு குறையும் என்பதால் இந்த மாடல் ஸ்கூட்டரின் விலை பெரிய அளவில் குறையும் எனக் கூறப்படுகிறது.
News April 5, 2026
வேட்பு மனுவில் வயதை குறைத்த விஜய்

பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் வழக்கு தொடர்பாக முரண்பாடுகள் இருந்தன. இதனால், விஜய் தரப்பில் அவற்றை திருத்தி கூடுதல் பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், விஜய்யின் வயது 51 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் 30-ல் பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயதை 52 என அவர் குறிப்பிட்டிருந்தார்.


