News December 27, 2025
ஆபரேஷன் ஆகாட் 3.0: டெல்லியில் 285 பேர் கைது

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபரேஷன் ஆகாட் 3.0-வை டெல்லி போலீஸ் நடத்தியது. இதில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 285 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆபரேஷன் ஆகாட் 1.0-வில் 70 பேரும், 2.0-வில் 500 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Similar News
News February 1, 2026
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா..!

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
News February 1, 2026
ஒரே வாரத்தில் 3 அரசு வேலைகள்.. எப்புட்ரா!

திருப்பதியைச் சேர்ந்த சாந்தினி ஒரே வாரத்தில் 3 அரசு வேலைகளுக்கு தேர்வாகி அசத்தியுள்ளார். புதன்கிழமை நீதித்துறையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு, அடுத்த 2 நாள்களில் குரூப்-2 மூலம் மற்றொரு வேலை கிடைத்தது. மேலும், வெள்ளியன்று வெளியான குரூப்-1 முடிவுகளில் DSP பதவிக்கு தேர்வாகினார். இதன்மூலம், ஒரே வாரத்தில் 3 அரசுப் பணிகளுக்கு தேர்வாகிய அவர், கடினமாக படித்தால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார்.
News January 31, 2026
BREAKING: இந்தியா அபார வெற்றி

நியூசி., அணிக்கு எதிரான கடைசி T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 271 ரன்களை குவித்தது. இந்திய வீரர் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசி., வீரர்கள் முதல் 10 ஓவர்களில் 131 ரன்கள் குவித்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தனர். எனினும், அடுத்த 10 ஓவர்களில் இந்திய வீரர்களின் ஆதிக்கத்தால் அந்த அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


