News May 1, 2024

வாக்குறுதி என்ற பெயரில் மோடி பொய்களை கூறுகிறார்

image

பாஜக தொழிலாளர்களின் போராட்ட உரிமைகளை பறித்துள்ளதாக CPM தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தியது மட்டுமல்லாமல், கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை கடைபிடிப்பதால் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வாக்குறுதி என்ற பெயரில் கணக்கற்ற பொய்களை பிரதமர் மீண்டும் கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.

Similar News

News March 17, 2026

கள்ளக்குறிச்சி: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

ஸ்பீட் போஸ்ட்.. புதிய சேவைகள் அறிமுகம்

image

‘24 ஸ்பீட் போஸ்ட்’ மற்றும் ‘48 ஸ்பீட் போஸ்ட்’ என்ற புதிய சேவைகளை இந்தியா போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி இன்று முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கிடைக்கும். தபால் / பொருட்கள் 24 மணி நேரம் & 48 மணி நேரத்துக்குள் உறுதியாக டெலிவரி செய்யப்படும் என்றும் இதில் தாமதம் ஏற்பட்டால் செலுத்தப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News March 17, 2026

வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

image

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி அரசு விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து லீவுதான். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!

error: Content is protected !!