News May 1, 2024

310 பேர் நீட் தேர்வுக்கு தயார்

image

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத உள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 236 பேர் மற்றும் அரசு மாதிரி பள்ளியில் (எலைட்) பிரத்தியேகமாக நீட் தேர்வுக்கு பயின்ற 74 பேர் என மொத்தம் 310 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Similar News

News March 13, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News March 12, 2026

ஈரோடு: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

ஈரோடு: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!