News December 27, 2025
குமரியில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
Similar News
News January 14, 2026
குமரியில் 200 வழக்குகள் பதிவு.. SP அதிரடி நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் படி நேற்று சிறப்பு வாகன போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமுறை மீறல், ஹெல்மட் அணியாமல் வருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.1,84,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.
News January 14, 2026
குமரி மக்களுக்கு தேவையான எண்கள்…!

காவல் துறை கண்காணிப்பாளர் -4652220167
வனத்துறை அலுவலர் -4652276205
வருவாய் அலுவலர் -9445000930
சார் நிலை ஆட்சியர் -9445000483
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் -9942352624
ஆதி திராவிட நலத்துறை அலுவலர் -7338801260
மண்டல மேலாளர், நுகர்பொருள் வாணிப கழகம் -4652260224
மேற்பார்வை பொறியாளர், மின்சார வாரியம் -4652230011
துணை இயக்குனர், விவசாயம் -4652275391
கோட்டாட்சியர் , நாகர்கோவில் -9445000482 *SHARE
News January 14, 2026
குமரியில் புற்றுநோய் கண்டறிதல் முகாம் – அமைச்சர்

”புற்றுநோய் இல்லா குமரி மாவட்டம்” என்னும் இலக்கிற்காக முதற்கட்ட களப்பணிகள் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட காட்டாத்துறை ஊராட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் முதல் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் காட்டாத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜன.16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே, இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


