News December 27, 2025
வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 12, 2026
பொங்கல் பண்டிகையால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. வேலூர்–நாகர்கோவில் ரூ.3,600, வேலூர்–நெல்லை ரூ.3,500 என வசூலிக்கப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
News January 12, 2026
தொரப்பாடி சிறையில் 25 பேர் பரோல் கேட்டு விண்ணப்பம்

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது வரை பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. கைதிகளின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 4 அல்லது 6 நாட்கள் பரோல் வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News January 12, 2026
வேலூர் மாவட்டத்தில் 209 மனுக்களுக்கு தீர்வு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் சேர்த்தல் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கடந்த 10-ம் தேதி நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 209 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


