News December 27, 2025
திருப்பத்தூர் காவல்துறை அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் நாள்தோறும் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இன்றைய (டிச-27) செய்தியில் இணையத்தில் உங்களது பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளது, எனவே எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் இதுகுறித்த புகார் அளிக்க #1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என பதிவிட்டுள்ளனர்.
Similar News
News January 12, 2026
திருப்பத்தூர்: 12th போதும்.. ரயில்வே துறையில் வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் <
News January 12, 2026
BREAKING: நாட்றம்பள்ளி அருகே தீ விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.12) பிற்பகல் 3 மணியளவில் இவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனருக்கு லேசாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
News January 12, 2026
திருப்பத்தூர்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

திருப்பத்தூர் மக்களே! இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


