News December 27, 2025
செங்கல்பட்டு: மின்தடையா? உடனே CALL

செங்கல்பட்டு மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
செங்கல்பட்டு: 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
மாமல்லபுரம்: பொங்கல் நாளில் பெரும் சோகம்!

மாமல்லபுரத்தில், நேற்று (ஜன.16), கல்லூரி மாணவர்கள் இருவர் சுற்றுலா வந்த நிலையில் மாலை, கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது மாணவர்கள் இருவரும் எதிர்பாரத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். இதனையடுத்து ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 17, 2026
தாம்பரம் அருகே கொடூர கொலை!

திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரீனாவும் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். மேலும் ரீனாவின் தோழி ரஜிதா என்பவரிடம் செல்வகுமார் பழகியுள்ளார். இந்நிலையில் ரீனா (ம) ரஜிதா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட செல்வகுமாரை 17 வயது சிறுவனுடன் சேர்ந்து இருவரும் கொடூர முறையில் கொலை செய்தனர். இது தொடர்பாக நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


