News May 1, 2024
மதுரை மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மயக்கம் அல்லது அசெளகரியம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இலவச ஆம்புலன்ஸ் எண் 108க்கு அழைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவசரகால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077, மாநில கட்டுப்பாட்டு அறை எண் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 22, 2025
மதுரை: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

மதுரை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு. இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 22, 2025
மதுரை: இன்றும் நாளையும் மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கீட்டு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டுள்ளன. இதனை பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் உதவி மையம் செயல்பட உள்ளது. கணக்கீட்டு படிவம் கிடைக்காதவர்கள் இம்மையத்தில் பெறலாம்.சந்தேகங்களுக்கு 1950 உதவி எண்ணை அழைக்கலாம். தெரியாதவர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 21, 2025
மதுரை: கோழிகளை விழுங்கிய பாம்பு..!

கொட்டாம்பட்டி அருகே பட்டமங்கலப்பட்டி கிராமத்தில், ஆண்டிச்சாமி என்ற விவசாயின் வீட்டின் அருகே குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வந்து கோழிகளை நேற்று விழுங்க தொடங்கியது. தகவல் அறிந்த கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சென்ற ரஞ்சித்குமார், கண்ணன், தங்கப்பாண்டி, விஜயராஜ் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் அப்பாம்பை பிடித்து, வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.


