News December 27, 2025
திருப்பத்தூரில் மின்தடையா? உடனே CALL

திருப்பத்தூர் மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
திருப்பத்தூர்: சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

ஜோலார்பேட்டை செம்மூர் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர் 2024-ல் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். சிறுமியின் வயது மற்றும் திருமணம் குறித்து அறிந்த டாக்டர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News January 17, 2026
திருப்பத்தூர்: வாலிபர் விபரீத முடிவு

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியியை சேர்ந்த வாலிபர் பிரவின். நேற்று (ஜன.16) பிரவினின் பெற்றோர் இவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரவின், துளசி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


