News December 27, 2025
90’s கிட்ஸ் நிலைமையை பாத்தீங்களா?

நாளுக்கு நாள் 90’s கிட்ஸ் பெண் தேடும் படலம் மீம்ஸ் போடும் அளவிற்கு பரிதாபமாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் கடலூரை சேர்ந்த இளைஞரோ, ’மணப்பெண் தேவை’ என தனது ஆட்டோவில் கலர்புல் விளம்பரம் செய்து பெண் தேடி வருகிறார். அதில் ஜாதி, மதம் தடையில்லை, வரதட்சணை தேவையில்லை. டிகிரி போதும் என மணப்பெண் தகுதியாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாவம் 90’s கிட்ஸ் என நெட்டிசன்கள் பரிதாபப்படுகின்றனர்.
Similar News
News January 5, 2026
கனிமொழியுடன் போனில் பேசிய அமித்ஷா

திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, கனிமொழியை போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் போனில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டது TN அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
News January 5, 2026
BREAKING: பணம் அறிவித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

TAPS ஓய்வூதிய திட்டத்தை CM ஸ்டாலின் அறிவித்ததால், ஜன.6 முதல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வூதியத்தை மீட்டெடுக்கும் முயற்சியை நிறுத்தி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை CM அறிவித்தது வெற்றிதான். ஏனைய 9 அம்ச கோரிக்கைகளை முழுமையாக பெறுவதற்கான போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
News January 5, 2026
நாள்தோறும் நாடகம் நடத்தும் திமுக: EPS

இன்று மாணவர்களுக்கு CM ஸ்டாலின், லேப்டாப் வழங்கவிருக்கும் நிலையில் EPS விமர்சித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் கொடுக்காமல் இளைஞர்களை திமுக அரசு வஞ்சித்தது. ஆனால், தற்போது தேர்தல் வருகிறது என்றதும் இளைஞர்களின் வாக்கைப் பெற லேப்டாப் கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுகிறது. நாள்தோறும் திமுக நடத்தும் நாடகங்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.


