News December 27, 2025
தேனியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்!

வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (27). இவர் சுரேஷ் என்பவரது காய்கறி கடையில் காய் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விருமாண்டி, இவரது நண்பர் பாண்டி செல்வம் ஆகியோர் மகாலட்சுமி வாங்கிய காய்கறிகளை எடுத்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமிக்கு கேட்டதற்கு அவரை அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தென்கரை போலீசார் விருமாண்டி, பாண்டிசெல்வத்தை கைது (டிச.26) செய்தனர்.
Similar News
News January 13, 2026
கம்பம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை.!

கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் அஜய் (25). இவர் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த இவரை நேற்று (ஜன.12) மா்ம நபா்கள் சிலர் சுருளிப்பட்டி – சுருளிஅருவி இடையே செல்லும் நெடுஞ்சாலையில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
தேனி: ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.11) நவநீதகிருஷ்ணன் வைகை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.