News December 27, 2025
தாராபுரம் அருகே விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை சிக்னல் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாராதமாக கட்டுப்பாட்ட இறந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
JUST IN: பல்லடம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்து நெகமம் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது, வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன் பகுதி மற்றும் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. இவ்விபத்தால், பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
News December 31, 2025
திருப்பூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா.. இத பண்ணுங்க

திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எண் 0421-2482816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)
News December 31, 2025
தாராபுரம் அருகே இளைஞர் தற்கொலை

தாராபுரம் அருகே உள்ள மனக்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இவரது மகன் நாகவிக்னேஷ்(23) என்பவர் கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையான அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


