News December 27, 2025
கிருஷ்ணகிரியில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE
Similar News
News January 3, 2026
ஓசூர்: இன்ஸ்டா காதலால் பறிபோன உயிர்!

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
கிருஷ்ணகிரி: வீடு தேடி வரும் ‘தாயுமானவர்’ திட்ட பொருட்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாளை ஜனவரி 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நேரடி விநியோகம் பயனாளிகளுக்குப் பெரும் உதவியாக அமையும். ஷேர் பண்ணுங்க


