News May 1, 2024
தமிழகம் முழுவதும் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

குருபெயர்ச்சியை ஒட்டி திருச்செந்தூர், பாடி திருவலிதாயம், குருவித்துறை உட்பட பல்வேறு குருபகவான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்புவாய்ந்த திருவாரூர் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால், பாதுகாப்புப் பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 29, 2025
‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன்? மனம் திறந்த சத்யராஜ்

39 ஆண்டுகளுக்கு பின் ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் நடித்திருந்தார். ஆனால், ‘சிவாஜி’ படத்திலேயே மிகப்பெரிய சம்பளத்துடன் நடிக்க வாய்ப்பு வந்தும், அதை சத்யராஜ் ஏற்கவில்லை. அந்த வாய்ப்பை ஏன் ஏற்கவில்லை என சத்யராஜ் இப்போது மனம் திறந்துள்ளார். அதாவது, நடிகராக தனக்கு மார்க்கெட் குறைந்து கொண்டிருந்த நேரம் அது என்பதால், வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
News August 29, 2025
GMAIL பயனர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த கூகுள்

வங்கி கணக்கு தொடங்கி நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் GMAIL இணைந்துள்ளது. இந்நிலையில் 2.5 பில்லியன் GMAIL பயனர்கள் இப்போது ஆபத்தில் உள்ளதாக கூகுள் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளது. GMAIL மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதோடு, PASSKEY பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
News August 29, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 29)

1905 – இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினம்
1943 – தமிழ் சினிமா பிரபலம் விஜயகுமார் பிறந்த நாள்
1958 – பாப் இசை பிரபலம் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம்
1959 – தெலுங்கு திரை நட்சத்திரம் அக்கினேனி நாகார்ஜுனா பிறந்த தினம்
1977 – நடிகர் விஷால் பிறந்த நாள்