News December 27, 2025
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 31, 2025
கடலூர் மாவட்டத்தில் 572 பேர் பலி!

கடலூர் மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டிய 3,810 நபர்கள் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகன ஓட்டிய 6,942 நபர்கள் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற 546 நபர்கள் மீதும் மொத்தம் 2,20,691 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 541 சாலை விபத்துகளில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 572 பேர் உயிரிழந்துள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
கடலூர்: 37 பேர் கொலை!

கடலூர் மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு மட்டும் 37 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 வழக்குகளில் 32 பேருக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில், சாதி மத ரீதியான கொலைகள் ஏதும் நிகழவில்லை என்றும், திருமணத்தை மீறிய உறவு, குடும்ப சண்டை, பணப் பிரச்சனை போன்ற காரணங்களால் மட்டுமே கொலைகள் நடந்துள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.30) இரவு 10 மணி முதல் இன்று(டிச.31) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


