News December 27, 2025

சென்னை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

Similar News

News December 27, 2025

தற்கொலைக்கு முயன்ற பெண் தூய்மை பணியாளர்

image

சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் முழுவதும், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் தூய்மை பணியாளர் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் கீழ் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு, காரின் டைரில் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு கீழே விழுந்தால் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

News December 27, 2025

சென்னை: சிசிடிவி டெண்டருக்கு தடை மறுப்பு

image

சென்னை காவல்துறையின் சிசிடிவி கேமரா பொருத்தும் டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. டெண்டரில் குறைபாடுகள் உள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பில் அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் தடை இன்றி விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளது.

News December 27, 2025

சென்னை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!