News December 27, 2025

வேலூர் இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு! DONT MISS

image

வேலூர் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க.( SHARE IT)

Similar News

News January 2, 2026

சிவானந்த யோகீஸ்வரர் சுவாமி குருபூஜை – எம்.பி பங்கேற்பு

image

திருவலத்தில் அமைந்துள்ள தொன்மையான திருத்தலமான வில்வநாதீஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவானந்த மௌனகுரு யோகீஸ்வரர் சுவாமிகள் குருபூஜை நேற்று (ஜன.1) நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சரவண உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News January 2, 2026

ஒரே நாளில் ரூ 8.49 கோடிக்கு மதுபானம் விற்பனை

image

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.8.49 கோடி மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 5.20 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.29 கோடிக்கு என மூன்று மாவட்டத்தில் 8.49 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News January 2, 2026

வேலூர்: ஆங்கில புத்தாண்டில் 25 குழந்தைகள் பிறந்தன

image

வேலூர் பென்ட்லேண்ட் அரசு குழந்தைகள் மற்றும் மகப்பேறு பிரிவு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு வரை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று மருத்துவமனையில் 15 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் மொத்தம் 25 குழந்தைகள் பிறந்தன. தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!