News December 27, 2025

தேனி: துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது!

image

போடி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (62). சூலப்புரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (29). இவர்கள் இருவரும் நேற்று (டிச.26) போடி, கொட்டகுடி காப்புக்காடு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அவர்களை கைது செய்து ஒரு நாட்டுதுப்பாக்கி, 2 தோட்டாக்கள், கத்தி, மண்வெட்டி, அரிவாள், டூவீலர், அலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 14, 2026

பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி – ஆட்சியர்

image

பொங்கல் விழாவை ஒட்டி தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். அதன் அடிப்படையில் கலை பண்பாட்டு துறை சார்பாக தேனி மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி பென்னிகுவிக் மணிமண்டபத்தில் 16ஆம் தேதி வைகை அணை 17ஆம் தேதி சுருளி அருவியில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி நடைபெறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

தேனியில் மதுபான கடை விடுமுறை – ஆட்சியர் தகவல்

image

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!