News December 27, 2025

தேனியில் FREE வக்கீல் சேவை..! தெரிஞ்சிக்கோங்க…

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 15, 2026

தேனி: கால்வாயில் ஆண் சடலம் மீட்பு..

image

உத்தமபாளையம் புறவழிச்சாலை உத்தமுத்து கால்வாயில் முதியவரின் உடல் கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு உடற்கூறாய்விற்காக GH-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில் இறந்தவர் உத்தமபாளையத்தை சேர்ந்த அலெக்சாண்டா் என்பதும், மது போதையில் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.

News January 15, 2026

புலிகள் கணக்கெடுக்கும் பணிக்கு கேமராக்கள் பொருத்தம்

image

இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பில் வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். 3 நாட்கள் நேர்கோட்டில் சென்று கணக்கெடுப்பு முடித்து அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக மேகமலை புலிகள் காப்பக டிவிசனில் 324 கேமராக்கள் பொருத்தி கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது.

News January 15, 2026

தேனியில் பெண் போலீஸ் மீது தாக்குதல்..

image

தேனி ஆயுதப்படை போலீஸ் திவ்யதர்ஷினி. இவர் மீது இவரது கணவர் அய்யனார் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வதால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து விசாரணைக்காக திவ்யதர்ஷினி தயாராகிய போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அய்யனார் அவரை கத்தியால் தாக்கினார். இதில் காயமடைந்த திவ்யதர்ஷினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து அய்யனரை கைது செய்தனர்.

error: Content is protected !!