News December 27, 2025
தூத்துக்குடி: சிறுவர்கள் ஓட்டிய வாகனங்கள் பறிமுதல்

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காயல்பட்டினம் –திருச்செந்தூர் சாலை மற்றும் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடந்த சோதனையில் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை வழங்கி, மீண்டும் நடந்தால் வழக்குப்பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தினர்.
Similar News
News December 30, 2025
தூத்துக்குடி: மூச்சுத் திணறலால் 2 பெண்கள் பலி

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வ சுந்தரி (65) நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதேபோல, பூபால்ராயபுரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (48) மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இறந்துள்ளார். இதுபற்றி தென்பாகம் மற்றும் வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News December 29, 2025
தூத்துக்குடி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <


