News May 1, 2024
தந்தையின் சொத்துக்களை அபகரித்த மகன்: கண்ணீர் மல்க மனு

திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (76). இவருக்கு பாலாஜி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். ரகுநாதனின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். பாலாஜி தனது தந்தை ராகுநாதனின் சொத்துக்களை பறித்து கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.
Similar News
News August 27, 2025
திருவள்ளூர் மக்களே ட்ரோன் ஓட்ட ஆசையா?

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் செப்.9 முதல் 11 வரை ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ட்ரோன்களை இயக்குவது, விதிமுறைகள், அரசு தரும் மானியம், ட்ரோன்களை வைத்து தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் 9543773337 / 9360221280 எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 27, 2025
திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 044-27662400 திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*
News August 27, 2025
திருவள்ளூர்: பணப்பிரச்சனை நீங்க இங்க போங்க

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் ’11விநாயகர் சபை’ உள்ளது. திரிபுராந்தர்களை அழிக்க சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் சென்றதால், தன்னை வணங்காமல் சென்றது ஏன் என விசாரணை சபையை அமைத்தார். அது தான் இந்த 11 விநாயகர் சபை. வெங்கடாஜலபதி தன் கடனை அடைக்க, இங்கே வந்து தீர்வு கண்டார். அதனால் இங்கு சென்று வழிபட்டால் செல்வம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் சென்று வாருங்கள். SHARE IT