News December 27, 2025
விருதுநகர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41).இவர் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து விசாரித்த போது, கோபாலபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (30) என்பவர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.இது குறித்து புகாரில் வத்திராயிருப்பு போலீசார் சீனிவாசனை தேடி வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
விருதுநகரில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
News December 27, 2025
விருதுநகர்: வேன் மீது மோதி நொறுங்கிய அரசு பேருந்து

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று மதியம் அரசு பேருந்து சென்றது. விருதுநகர் பட்டம்புதூர் அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற போது முன்னால் பழுதாகி நின்ற லோடு வேனின் பின்புறம் மோதியது. இதில் பேருந்தின் கண்ணாடி முகப்பு விளக்குகள் சேதமடைந்தன இரண்டு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
News December 27, 2025
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


