News December 27, 2025
மயிலாடுதுறை: 300 ஆண்டுகள் பழமையான வாள் திருட்டு!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுற்றுலா வரும் மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் ஒன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 29, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு ஊசி திட்டத்தின் கீழ் 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று(டிச.29) முதல் தொடங்கி ஜனவரி 28ஆம் தேதி வரை கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி போட்டு கொடிய வைரஸ் கிருமிகளில் இருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
மயிலாடுதுறை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!\
News December 29, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் திருவெண்காடு அரசு சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி, கல்லூரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 மாணவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உரிய சான்றுகளுடன் வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்


