News December 27, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. காலையிலேயே ஸ்வீட் நியூஸ்

பொங்கல் பண்டிகைக்கு 20 நாள்களே உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை அடங்கிய பரிசுத் தொகுப்பு ஜனவரி 2-வது வாரத்திற்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ₹3,000 பரிசுத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் ஓரிரு நாள்களில் அரசு அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News February 2, 2026
வெள்ளி விலை ₹1.25 லட்சம் குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

<<19027688>>தங்கம் போலவே<<>> வெள்ளி நகைகளின் விலையும் சரசரவென குறைந்து வருகிறது. வெள்ளி இன்று மட்டும் கிலோவுக்கு ₹20,000 குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 4 நாள்களில் கிலோவுக்கு ₹1.25 லட்சம் சரிந்துள்ளது. சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹300-க்கும், 1 கிலோ ₹3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதே சந்தை நிலவரம் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பதால், விலை மேலும் குறையலாம்.
News February 2, 2026
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண்கள்!

பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பலுசிஸ்தான் விடுதலைப் படைக்கும்(BLA) இடையே நடக்கும் <<19026027>>மோதல் <<>> அந்நாட்டில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதில் BLA-வை சேர்ந்த பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர். மோதலில் 200 பாக்., ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக BLA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
ஒரு கார் ரெஜிஸ்டரேஷன் நம்பருக்கு ₹2.08 கோடி!

ஆந்திராவை சேர்ந்த கிரண் என்பவர், ‘DDC 0001’ என்ற வாகன எண்ணை ₹2.08 கோடிக்கு வாங்கியுள்ளார். Big Boy Toyz Auction House நடத்திய ஏலத்தில் வாங்கப்பட்ட இந்த எண்தான், நாட்டின் மிக விலையுயர்ந்த வாகன எண். இதற்கு முன், DL 1C 0001 என்ற எண் ₹1.5 கோடிக்கு ஏலம் போனதே ரெக்கார்டாக இருந்தது. அதிக விலைக்கு கார், பைக் வாங்கலாம்; யாராவது நம்பரை வாங்குவாங்களா என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


