News December 27, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நேற்று இரவு முதல் இன்று (டிச.27) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News January 11, 2026
தருமபுரியில் 12,926 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை!

தருமபுரி: கடந்த 2025ம் ஆண்டில், மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்சுகளுக்கு 43,200 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றின் மூலம், மொத்தம் 12,926 கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிகளில் விரைவாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர். அதேபோல், விபத்தில் சிக்கி காயமடைந்த 9,394 பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 2,860 பேர், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட 2,330 பேர் விரைவாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
News January 11, 2026
தருமபுரி: அரசு அதிகாரியை டார்ச்சர் செய்த தேமுதிக நிர்வாகி!

தருமபுரி: பாலக்கோடு பகுதியில், தேமுதிக நிர்வாகி ராஜதுரை பத்திரப்பதிவுக்காக வாரிசு சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்போது, அது போலி என தெரியவந்ததால் சார் பதிவாளர் சக்திவேல் நிராகரித்தார். அதைத்தொடர்ந்து சார்பதிவாளரை மிரட்டி வந்த ராஜதுரை, சமூக வலைத்தளங்களிலும் இவர் லஞ்சம் கேட்பதாக வதந்திகளை பரப்பி வந்தார். இதுகுறித்த புகாரில் ராஜதுரை மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.
News January 11, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன-11) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


