News December 27, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நேற்று இரவு முதல் இன்று (டிச.27) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News January 9, 2026
தருமபுரி: காஸ் சிலிண்டர் யூசரா ? உங்களுக்கு தான்!

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 9, 2026
அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜனவரி 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டால் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் சேலம் மண்டல துணை இயக்குநர் அலுவலக மின் அஞ்சல் ddtextilessalemregional@gmail.com மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.
News January 9, 2026
தருமபுரியில் மாவட்ட அளவிலான பயிலரங்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் சார்பில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு HPV தடுப்பூசிக்கான மாவட்ட பயிலரங்கம் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சதீஸ் மற்றும் தேசிய நல குழும இயக்குநர் அருண்தம்புராஜ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். உடன் அரசுத்துறை அலுவலர்கள் இருந்தனர்.


