News December 27, 2025

செய்யூர் தொகுதியில் செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, துறை சார்ந்த அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். திருவாதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Similar News

News January 8, 2026

செங்கல்பட்டு மக்களே பிப்ரவரியில் HAPPY NEWS

image

செங்கல்பட்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி மாத இறுதிக்குள் திறக்கப்படும். ஒரு பிரதான கட்டடம், 3 நுழைவாயில்கள், ஒரே நேரத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி, தினம் 25,000 பயணிகள் பயன்பாடு, மலிவு விலை உணவகம், டார்மிடரி, மருத்துவ மையம், 34 கடைகள் மற்றும் பிற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

News January 8, 2026

செங்கல்பட்டு: போலீஸ் மீது மோத வந்த கார்

image

மறைமலைநகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை ஓரமாக செல்லுமாறு காவலர் செந்தில் சைகை காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், வேகத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, காவலர் மீதே காரை ஏற்றுவது போல முன்னேறிச் சென்றார். உடனடியாகச் காவல்துறையினர் கரை மடக்கிப் பிடித்தனர். காரிலிருந்த ஓட்டுநர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 8, 2026

செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று ( ஜனவரி-07) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!