News May 1, 2024
முன் ஜாமின் கோரி பிரஜ்வால் ரேவண்ணா மனுதாக்கல்

பாலியல் வழக்கில் முன் ஜாமின் கோரி பிரஜ்வால் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால், பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.
Similar News
News March 13, 2026
தோனி செய்வது சரியல்ல: புஜாரா

ஐபிஎல் பீவர் தொடங்கியுள்ள நிலையில் தோனி பேட்டிங் குறித்து Ex கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். தோனியால் ஒரு போட்டியைத் தனி ஒரு ஆளாக வென்று கொடுக்க முடியும் என்று கூறியதுடன், 8 அல்லது 9-வது வீரராக அவர் பேட்டிங் செய்வது சரியல்ல என கூறியுள்ளார். வெறும் 5, 10 பந்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, 25 முதல் 30 பந்துகளை எதிர்கொள்வது அணிக்கு நல்லது எனவும் அவர் பேசியுள்ளார்.
News March 13, 2026
பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: CM ஸ்டாலின்

OBC அல்லாத கிரீமி லேயர் நிர்ணயத்தை தெளிவுபடுத்தும் SC-ன் தீர்ப்பை தான் வரவேற்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி இனி சம்பள வருமானத்தை கிரீமி லேயருக்கான வணிகம் அல்லது சொத்து வருமானத்துடன் சமப்படுத்த முடியாது; வேலைவாய்ப்புத் துறைகளில் விரோதமான பாகுபாட்டை இத்தீர்ப்பு நிராகரிக்கிறது என கூறியுள்ளார். பல வருட போராட்டத்திற்குப் பிறகு OBC நீதிக்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி பயப்படாதீங்க: பிரேமலதா

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்னையை திறம்பட கையாள முடியும் என PM மோடி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தேவையின்றி பதட்டம் அடைய வேண்டாம் என தெரிவித்தார். அதுபோல, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


