News December 27, 2025
அன்னபூரணி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் அன்னபூரணி அம்மன் சன்னிதானத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை வளர்பிறையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீஅன்னபூரணி அம்மனை வழிபட்டனர்.
Similar News
News January 25, 2026
நாகர்கோவில்: டிரைவர் மீது தாக்குதல்

நாகர்கோவில் அருகே சடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (41). டிரைவரான இவரை பீமநகரி சிஎம்சி நகர் பகுதியை ஏசுவடியான் என்பவர் மண் வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சுதாகர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் ஏசுவடியான் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
குமரி மக்களே அரசு பஸ்ஸில் பிரச்சனையா?

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News January 25, 2026
குமரி: இளம்பெண் தற்கொலை முயற்சி

திங்கள்சந்தையை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பத்தறை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்ததும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த இளைஞர் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கேட்ட இளம்பெண்ணும் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


