News December 27, 2025

புதிய வரலாறு படைத்த தீப்தி சர்மா

image

டி20-ல் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக இன்று 3 விக்கெட்டுகளை எடுத்ததால், இந்த பெருமை பெற்றார். இந்தியாவில் 150 விக்கெட்களை கடந்த முதல் வீராங்கனையை மாறிய அவர், சர்வதேச அளவில் 2-வதாக உள்ளார். அதேசமயம் டி20-ல் அதிக விக்கெட்டுகளை(151) வீழ்த்தியவர்களின் பட்டியலில், ஆஸ்திரேலிய வீராங்கனை மேகனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Similar News

News January 2, 2026

2026: அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள்

image

2025 கோலிவுட்டுக்கு கலவையான ஆண்டாக அமைந்தது. ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் சொதப்பிய நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது 2026 பொங்கல் அன்றே 2 பெரிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இந்த வருடம் முழுவதும் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. நீங்க இந்த வருஷம் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது?

News January 2, 2026

மவுசு குறையாத திருப்பதி லட்டு!

image

2025-ம் ஆண்டில் திருப்பதியில் 13.52 கோடி லட்டுகள் விற்பனையாகியுள்ளன. 2024-ல் 12.15 கோடி லட்டுகள் விற்பனையான நிலையில், கடந்த வருடம் கூடுதலாக 1.37 கோடி லட்டுகள் விற்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விற்பனையாகும். அண்மையில் திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் இருந்ததாகச் சர்ச்சை வெடித்தபோதிலும், பக்தர்களின் நம்பிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

News January 2, 2026

புறக்கணித்தது காங்கிரஸ்.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

image

வைகோவின் ‘சமத்துவ நடைபயணத்தை’ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், காங்., புறக்கணித்துள்ளது. ஏற்கெனவே, அரசின் கடன் விவகாரத்தில் திமுக – காங்., இடையே புகைச்சல் உண்டாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பயண அழைப்பிதழில் பிரபாகரன் போட்டோ இடம்பெற்றதாலேயே காங்., இதில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!