News May 1, 2024
கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிடக்கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அந்த மருந்தை தயாரித்த ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டது குறிபிப்பிடத்தக்கது.
Similar News
News August 29, 2025
ALERT: 19 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செங்கை, காஞ்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?
News August 29, 2025
ஹீரோ லோகேஷ் படத்தில் 2 ஹீரோயின்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன், லோகேஷுக்கு ஜோடியாகவும், இன்னொரு நாயகியாக சுதா என்பவரும் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்காக லோகேஷ் தாய்லாந்தில் தற்காப்பு கலைகளை கற்றார்.
News August 29, 2025
ராசி பலன்கள் (29.08.2025)

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – ஆதாயம் ➤ மிதுனம் – போட்டி ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – வெற்றி ➤ தனுசு – ஆதரவு ➤ மகரம் – பரிசு ➤ கும்பம் – நிம்மதி ➤ மீனம் – உயர்வு.