News December 26, 2025
கரூரில் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சாதாரண பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.
Similar News
News January 12, 2026
கரூரில் அருகே விபத்து: இளைஞர் பலி

கரூர் அருகே பைக்கில் சென்ற பிரகாஷ் (26) என்பவர், முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.